Delhi Shocker: பாலியல் வன்கொடுமையை எதிர்த்த 8 வயது சிறுவன் செங்கல்லால் அடித்துக் கொலை.. குற்றவாளி போக்சோவில் கைது..!
டெல்லியில் பாலியல் வன்கொடுமையை தடுத்த 8 வயது சிறுவன், செங்கல்லால் அடித்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 02, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி ஷாஹீன் பாக் (Shaheen Bagh) கட்டிடத்தில் உள்ள கட்டிடத்தில் 8 வயதுடைய சிறுவனின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 3-Year-Old Girl Rape & Murder: சாக்லேட் தருவதாக 3 வயது சிறுமி பலாத்காரம், கொலை.. 22 வயது உறவுக்கார இளைஞர் அதிர்ச்சி செயல்.!
இதுகுறித்த விசாரணையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், குற்றம் சாட்டப்பட்ட ஃபிதா ஹுசைனை அடையாளம் கண்டு கைது செய்தனர். மேலும், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த சிறுவனை பாலியல் வன்கொடுமை (Sexual Abuse) செய்ய முயன்றதாகவும், அப்போது என்னை தடுக்க முயன்றதால் அருகில் கிடந்த செங்கலை எடுத்து தலையில் அடித்து (Murder) கொன்றதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Nov 02, 2024 12:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

