3-Year-Old Girl Rape & Murder: சாக்லேட் தருவதாக 3 வயது சிறுமி பலாத்காரம், கொலை.. 22 வயது உறவுக்கார இளைஞர் அதிர்ச்சி செயல்.!
உறவுக்கார இளைஞர் சிறுமியுடன் அன்பாக பழகி, அவருக்கு சாக்லேட் வாங்கி கொடுப்பதாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து கொன்று புதைத்த கொடுமை ஆந்திராவில் நடந்துள்ளது.
நவம்பர் 02, திருப்பதி (Andhra Pradesh News): பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பாலியல் குற்றவாளிகளாக கைது செய்யப்படுவோர், சிறைகளில் தண்டனை கைதிகளாக அடைக்கப்படுவதால், கைதுக்குப்பின் சிறைதானே என்ற அலட்சியம், இவ்வாறான குற்றங்களை இழைக்க ஒரு மூலகாரணமாகவும் அமைகிறது. இதனால் பாலியல் ரீதியாக பெண்களிடம் அத்துமீறுவோருக்கு ஈவு-இரக்கமற்ற மரண தண்டனை விரைந்து வழங்கப்படவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது நடக்கும் இவ்வாறான துயரங்கள் நாடெங்கும் அதிர்வலையை உண்டாக்குகிறது. இதனிடையே, ஆந்திராவில் மூன்றரை வயதுடைய பச்சிளம் குழந்தை, தெரிந்த நபர் ஒருவராலேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
சாக்லேட் கொடுப்பதாக அழைத்துச் சென்று கொடுமை:
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் (Andhra 3-Year-Old Minor Girl Rape Murder) மாவட்டம், வடமலைப்பேட், அப்பி கண்ட்ரிகா பகுதியில் மூன்றரை வயதுடைய சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி தம்பதியின் இரண்டாவது மகள் ஆவார். சிறுமியின் பெற்றோருக்கு உறவுக்கார இளைஞரான 22 வயது நபர், வெள்ளிக்கிழமை (நேற்று) அன்று மூன்றரை வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பதாக தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். பின் கடையில் சிறுமிக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்தவர், அங்குள்ள வயலுக்கு சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். Shocking Video: நாயின் வாலில் பட்டாசு வைத்து கொடுமை; தீபாவளி கொண்டாட்டத்தில் கேடு செய்த இளைஞன்..!
சிறுமி பலாத்காரம் & கொன்று புதைப்பு:
இதனால் சிறுமி மயங்கிவிட்ட நிலையில், அவர் சிறுமியை அங்கேயே மண்ணில் புதைத்து தப்பிச் சென்றுள்ளார். வீட்டில் இருந்து வெளியே விளையாடிய சிறுமி மாயமானதால், பதறிப்போன பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, இந்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகி இருக்கிறது.
பெற்றோர் குமுறல்:
22 வயது இளைஞர் சுஷாந்த்தை சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது, இந்த துயரம் அம்பலமானதை தொடர்ந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பவேண்டும் என பெற்றோர் கண்ணீர் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பெரும்பாலான குற்றங்கள், அவர்களுக்கு நன்கு தெரிந்த உறவினர்கள் அல்லது குடும்ப நண்பர்களால் இழைக்கப்படுகிறது என்பது வேதனைக்குரியது.
உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் கண்ணீருடன் நிற்கும் காட்சிகள்:
దారుణం.. మూడున్నరేళ్ల చిన్నారిని రేప్ చేసి చంపేసిన కిరాతకుడు
చిత్తూరు జిల్లా వడమాల పేట మండలం అబ్బి కండ్రిగలో ఘటన
యానాది కాలనీకి చెందిన మధు కుమార్తె సాన్వికపై అత్యాచారం చేసి చంపేసిన సమీప బంధువు సుశాంత్
కన్న కుమార్తె చనిపోవడంతో కన్నీరుమున్నీరవుతున్న తల్లిదండ్రులు
నిందితుడిని… pic.twitter.com/Ej1MD4okts
— BIG TV Breaking News (@bigtvtelugu) November 2, 2024
(The above story first appeared on LatestLY on Nov 02, 2024 09:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

