Girl Dies After Noodles Get Stuck In Her Throat: தொண்டையில் நூடுல்ஸ் சிக்கி சிறுமி பரிதாப பலி; பெற்றோர் பரிதவிப்பு..!

கேரளாவில் நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் நூடுல்ஸ் சிக்கி, சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Girl Dies After Noodles Get Stuck In Her Throat: தொண்டையில் நூடுல்ஸ் சிக்கி சிறுமி பரிதாப பலி; பெற்றோர் பரிதவிப்பு..!
Noodles | Death File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 03, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம், அடிமாலி பகுதியை சேர்ந்த தம்பதி சோஜன்-ஜினா. இத்தம்பதிக்கு ஜோவானா (வயது 8) என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். Five Killed In Car Accident: கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு; சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நேர்ந்த சோகம்..!

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிறுமி ஜோவானா, தனது வீட்டில் நூடுல்ஸ் (Noodles) உணவை சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, நூடுல்ஸ் தொண்டையில் சிக்கிக்கொண்டு சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதில், மயங்கி விழுந்த சிறுமியை அவரது பெற்றோர் மீட்டு, உடனடியாக அடிமாலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக இடுக்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுமி ஜோவானா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, அடிமாலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 03, 2024 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).