2 people Drowned in the Sea: செல்பி எடுத்தபோது சோகம்.. ராட்சத அலையில் சிக்கி 2 பெண்கள் பலி., இன்ப சுற்றுலாவில் பரிதாபம்.!

கடற்கரையில் அழகை ரசித்த பெண்கள், செல்பி எடுக்கும் முயற்சியின்போது ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

2 people Drowned in the Sea: செல்பி எடுத்தபோது சோகம்.. ராட்சத அலையில் சிக்கி 2 பெண்கள் பலி., இன்ப சுற்றுலாவில் பரிதாபம்.!
Andhra Pradesh 2 Women Drowned into Water (Photo Credit: @TeluguScribe X)

ஜூன் 03, அநாகப்பள்ளி (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அநாகப்பள்ளி மாவட்டம், மகவரபலேம் மண்டல், ஷெட்டிலேம் கிராமத்தில் வசித்து வரும் நுக ரத்னம், கனகதுர்கா அக்கா. ஞாயிற்றுக்கிழமையான நேற்று, இவர்கள் இருவரும் தங்களின் மற்றொரு உறவினருடன் அங்குள்ள அச்யுதபுரம், தண்டடி கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு கடற்கரை மற்றும் கடலின் அழகை கண்டு ரசித்துள்ளனர். Ola Electric Layoff: 400 - 500 பேரை பணிநீக்கம் செய்ய ஆயத்தமாகும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்; ஊழியர்களுக்கு அதிர்ச்சி.! 

இருவர் பலி., ஒருவர் உயிர் ஊசல்: இதனிடையே, இவர்கள் மூவரும் கடலுக்குள் சென்று செல்பி எடுத்துள்ளனர். அச்சமயம் ராட்சத அலையில் சிக்கிய பெண்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் மற்றும் காவல் துறையினர், இவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால், மேற்கூறிய இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒரு பெண்மணி மட்டும் உயிருக்கு போராடி வருகிறார்.

இன்பசுற்றுலாவில் சோகம்: இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், கடலில் மூழ்கி உயிரிழந்த பெண்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அச்யுதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், 6 பேராக குடும்பத்தினர் கடற்கரைக்கு சென்றிருந்த சமயத்தில் துயரம் ஏற்பட்டது உறுதியானது.

(The above story first appeared on LatestLY on Jun 03, 2024 11:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).