Ola Electric (Photo Credit: @OlaElectric X)

ஜூன் 03, புதுடெல்லி (New Delhi): மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் ஓலா எலக்ட்ரிக் (Ola Electric), தற்போது தனது வாகன உற்பத்தி மையங்களில் பணியாற்றும் 400 முதல் 500 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து, அதற்கு பதிலாக அவர்கள் வாங்கும் ஊதியத்தில் இருந்து குறைந்த அளவிலான ஊதியத்தை பெறும் நபர்களை தேர்வு செய்து பணியில் அமர்த்தவுள்ளது. Planet Parade on June 3: புதன், செவ்வாய், சனி, யுரேனஸ் உட்பட 7 கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு; வைரல் வீடியோ உள்ளே.! 

400 - 500 பேர் பணிநீக்கம்: நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு காரணமாக இம்முடிவை எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ள ஓலா ஈவி, தனது அடுத்தகட்ட நிலைக்காக சீரமைப்பு பணிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களில், பணிநீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளப்போகிறவர்கள் யார்? என்ற அச்சம் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 200 பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்தது. எதிர்வரும் மாதத்தில் 400 பேர் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது. மே மாத அறிவிப்புகளின்படி 37 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.