NTR District Accident: வளைவில் வேகத்துடன் திரும்பியதால் சோகம்; பேருந்து கவிழ்ந்து 10 பேர் படுகாயம்.!

பேருந்து வளைவான சாலையில் பயணித்தபோது, அதிவேகத்திலேயே தொடர்ந்ததால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பயணிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

NTR District Accident: வளைவில் வேகத்துடன் திரும்பியதால் சோகம்; பேருந்து கவிழ்ந்து 10 பேர் படுகாயம்.!
Andhra Pradesh Accident 25 Aug 2023 (Photo Credit: @ANI Twitter)

ஆகஸ்ட் 25, நந்திகமா (Andhra Pradesh News): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள என்.டி.ஆர் மாவட்டம், பென்னுகஞ்சிப்ரோலு, தொட்டசர்ல கிராமத்தில் இன்று பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தேசிய நெடுஞ்சாலை எண் 65ல் ஏற்பட்ட இவ்விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த நந்திகமா துணை காவல் கண்காணிப்பாளர் ஜனார்த்தனன், நேரடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டார். பேருந்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. Fake Call Center Busted: “உங்க கம்பியூட்டரில் வைரஸ் பரவிவிட்டது” – போலி கால்சென்டர் கும்பல் நூதன கைவரிசை.. 14 பேர் அதிரடி கைது.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 25, 2023 10:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).