ஆகஸ்ட் 25, பானாஜி (Goa): தொழில்நுட்பம் நம்மிடையே அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, அவை சார்ந்த பல்வேறு பலன்களை நாம் அனுபவித்து வந்தாலும், அதனால் ஏற்படும் பாதகங்களையும் சந்தித்து வருகிறோம்.
இணையவழியில் நாம் எவற்றையும் வாங்கவும், விற்கவும், பார்க்கவும் முடிகிறது. நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் வழிவகை செய்கிறது. ஆனால், இந்த தொழில்நுட்பங்கள் மோசடிகளுக்கு பெரும் உதவி செய்கின்றன.
மக்களை ஏமாற்றுவதற்காகவே வேலையாட்களை நியமனம் செய்து, உண்மையான அலுவலகம் போல நடைபெறும் பணிகள் இந்தியாவில் ஏராளம். குறிப்பாக நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து வரும் நபர்கள், இந்தியாவில் பல சைபர் குற்ற மோசடிகளில் ஈடுபடுவது தொடர்கதையாகியுள்ளது. Gingee Baby Died: அக்காவை அழைக்க வந்த 3 வயது தம்பிக்கு நடந்த சோகம்; தலைநசுங்கி பலியான பரிதாபம்.!
இந்நிலையில், கோவா காவல் துறையினர் பானாஜி நகரில் செயல்பட்டு வந்த போலியான கால் சென்டரை கண்டறிந்து, அங்கு திருட்டுசெயலில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த 14 பேரை கைது செய்தனர். இவர்கள் அமெரிக்கர்கள் உட்பட பலருக்கும் தொழில்நுட்ப உதவி செய்ததாக மோசடி செய்து வந்துள்ளனர்.
உங்களது கணினி அல்லது லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களில் வைரஸ் வந்துவிட்டது. அதனை நாங்கள் தயார் செய்து தருகிறோம் என திருட்டு செயலில் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.5.5 இலட்சம் மதிப்புள்ள 9 லேப்டாப், 4 ஸ்மார்ட்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.