Uncle Murder Nephew: மகன்போல வளர்த்த மருமகனை கூறுபோட்ட மாமா.. குடியால் குடிமுழுகிப்போன பரிதாபம்.!

பிள்ளைபோல வளர்ந்து வந்த மருமகன் மதுபோதையில் செய்த சேட்டையால் மனம் நொந்த மாமா, இறைச்சியை வெட்டும் கத்தியால் கூறுபோட்டு பயங்கரம் அனக்காபள்ளியை அதிரவைத்துள்ளது.

Uncle Murder Nephew: மகன்போல வளர்த்த மருமகனை கூறுபோட்ட மாமா.. குடியால் குடிமுழுகிப்போன பரிதாபம்.!
Crime Template

மார்ச் 03: ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனக்காபள்ளி, பரவாடா பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீனு (வயது 48). இவர் கணபர்த்தி பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரின் தங்கை மகன் லோவ ராஜு (வயது 30). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ராஜுவின் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் அவர் தனது மாமா ஸ்ரீனு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மாமாவின் கறிக்கடையில் அவருக்கு உதவியாக இருந்த ராஜு, மதுபானம் அருந்தும் பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளார். இதனால் சொந்த கடையில் பணத்தை திருடி மதுபானம் அருந்தி வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ராஜு - ஸ்ரீனு இடையே தகராறு நடந்து வந்துள்ளது. இவர்களிடையே ஒருகட்டத்தில் தகராறு அதிகமானதால், ராஜு நரசிபட்டினத்தில் உள்ள இறைச்சி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். Mother Died Innocent Child Reacts: தாய் இறந்தது தெரியாமல் 2 நாட்களாக கடையில் உணவு வாங்கி சாப்பிட்ட மகன்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

பின்னர், மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன் மாமாவின் கறிக்கடையிலேயே வேலைக்கு சேர்த்தார். இருவரும் நேற்று முன்தினம் இரவில் இறைச்சி கடை அருகில் மதுபானம் அருந்த, அப்போது மாமாவிடம் ராஜு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்திற்கு மேல் ராஜுவின் செயல்பாடுகள் எல்லையை கடந்துள்ளன.

இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற ஸ்ரீனு, கடையில் இருந்த கத்தியால் ராஜுவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர், உடலை துண்டு துண்டாக்கி பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்து, அதிகாலையில் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்துள்ளார். இந்த தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், விரைந்து வந்து ஸ்ரீனுவை கைது செய்தனர். விசாரணையில் மேற்கூறிய தகவல் அம்பலமானது.

(The above story first appeared on LatestLY on Mar 03, 2023 04:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).