Mother Died Innocent Child Reacts: தாய் இறந்தது தெரியாமல் 2 நாட்களாக கடையில் உணவு வாங்கி சாப்பிட்ட மகன்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
தனது தாய் இறந்தது கூட தெரியாமல் 11 வயது சிறுவன் தாயுடன் 2 நாட்கள் தங்கியிருந்த துயரம் பெங்களூரை அதிரவைத்துள்ளது. தாய் உறங்குவதாக எண்ணி கடையில் உணவு வாங்கி சாப்பிட்ட சிறுவனின் அறியாமை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
மார்ச் 03, பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் (Bangalore, Karnataka), யஷ்வந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் அன்னம்மா (வயது 45).இவரின் மகன் சூர்யா (வயது 11). அன்னம்மாவின் கணவர் கடந்த ஆண்டில் இயற்கை எய்திவிட்டார். இதனால் அன்னம்மா கூலிவேலை செய்து மகனை கவனித்து வந்துள்ளார். குறைந்த இரத்த அழுத்தம் (Diabetes & Blood Pressure) மற்றும் சர்க்கரை நோயும் அவருக்கு இருந்துள்ளது.
இதற்கிடையில், தனது மகனோடு படுத்து உறங்கிய அன்னம்மா எழுந்துகொள்ளவில்லை. உடல்நலக் கோளாறால் உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது. தாயின் இறப்பை அறியாத மகனும், தாய் உறங்குவதாக நினைத்து (Mother Died) அம்மாவை எழுப்பி பார்த்துவிட்டு வீட்டில் இருந்த பணத்தை வைத்து கடையில் உணவு சாப்பிட்டு வந்துள்ளார். Pennadam Accident: மகனின் பிறப்பு சான்றிதழ் வாங்கிவர சென்ற இளம் தந்தை, நண்பர் விபத்தில் மரணம்.. தொடரும் விபத்துகளால் பதறும் உள்ளூர் மக்கள்.!
கடந்த 2 நாட்களாக சூர்யா கடையிலேயே உணவு வாங்கி சாப்பிடுவதை கண்ட சிலர், அம்மா எங்கே? என கேட்டுள்ளனர். அதற்கு சிறுவன் அம்மா 2 நாட்களாக எழவில்லை, உறங்கிக்கொண்டே இருக்கிறார் என தெரிவித்து இருக்கிறான். இதனைக்கேட்டு அதிர்ந்துபோனவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது உண்மை அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து, சம்பவம் குறித்து ஆர்.டி நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அன்னம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
(The above story first appeared on LatestLY on Mar 03, 2023 02:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

