பிப்ரவரி 06, புலிவேந்தா: ஆந்திரப்பிரதேசம் (Andra Pradesh) மாநிலத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர் மாவட்டம் (YSR District), புலிவேந்தா பகுதியில் வசித்து வருபவர் தாரனேஸ்வரர் (வயது 21). இவர் திருப்பதியில் உள்ள கூடூருவில் இருக்கும் தனியார் பொறியியல் (Engineering College Student) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கல்லூரியில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கியிருந்தவாறு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (Sunday) என்பதால் விடுதி அறையில் தாரனேஸ்வரன் தனியே இருந்துள்ளார். அப்போது, அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவருகிறது.
அன்றைய நாளில் விடுமுறையாக வெளியே சென்றிருந்த மாணவர்கள், மீண்டும் அறைக்கு வந்து பார்த்தபோது தாரனேஸ்வரன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், இதுகுறித்து விடுதியின் பாதுகாவலர் சீனிவாசனுக்கு (வயது 57) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Siddaramaiah about Hindutva: கொலை, வன்முறை, பாகுபாடுகளை ஊக்குவிக்கும் இந்துத்துவா – சித்தராமையா பரபரப்பு பேச்சு.!
அதிர்ச்சியுடன் மாணவரின் அறைக்கு விரைந்த சீனிவாசலு, மாணவரின் உடலை பார்த்துக்கொண்டு இருந்தவாறு மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அவரை மீட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.
பின்னர், இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலை (Suicide) தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.