ஏப்ரல் 01, புதுடெல்லி (New Delhi): ஒவ்வொரு மாதமும் எண்ணெய் மற்றும் கியாஸ் விற்பனை நிறுவனங்களால் வீடு மற்றும் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சிலிண்டர் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் விலை என்பது வீழ்ச்சியை கண்டாலும், வணிக ரீதியான சிலிண்டரின் விலை என்பது குறையாமல் இருந்து வந்தது.
கடந்த மாதத்தில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் (Gas Cylinder Price April 2024) சமையல் எரிவாயு விலை ரூ.918 என எண்ணெய் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டது. 19 கிலோ வணிக சிலிண்டர் ரூ.1960 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை ரூ.100 அளவில் குறைத்து அறிவித்தது. 80 Aged Grand ma Raped: 80 வயது பாட்டியை கதறக்கதற பலாத்காரம் செய்த 22 வயது பேரன்; மதுபோதையில் அதிர்ச்சி செயல்.!
ஏப்ரல் மாத விலை நிலவரம்: இந்நிலையில், இம்மாதத்தில் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை ரூ.30 குறைக்கப்பட்டு, 1930 க்கு விற்பனை செய்யப்படுகிறது இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டர் விலை என்பது எவ்வித மாற்றமும் இன்றி தொடருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, இந்தியாவில் சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் அரசின் வரிகளிலும் சேர்ந்து சிலிண்டர் மற்றும் பிற எரிவாயு விலைகள் அறிவிக்கப்படுகிறது.