மார்ச் 31, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், பிஹாவுர் கிராமத்தை சேர்ந்தவர் அமித் கவுதம் (வயது 22). இவர் தினக்கூலியாக பணியாற்றி வருகிறார். மதுபோதைக்கு அடிமையான அமித் கவுதம், எப்போதும் கிடைத்த வேலைக்கு சென்று மதுபானம் அருந்தி ஊரைச்சுற்றி வந்துள்ளார்.
தனியாக வசித்து வந்த மூதாட்டி பலாத்காரம்: இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்திய அமித், 80 வயதுடைய தனக்கு பாட்டி உறவுமுறை வேண்டியவரின் வீட்டிற்கு சுவர் ஏறிக்குதித்து சென்றுள்ளார். வீட்டில் தனியாக துணையின்றி வசித்து வந்த மூதாட்டி, உறங்கிக்கொடு இருந்த சமயத்தில், அமித் கவுதம் அவரை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். Women Thrown from Window by Husband: சுவையாக சிக்கன் சமைக்காத மனைவி: மாடியில் இருந்து தூக்கி வீசிய கணவர் குடும்பம்; பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்.!
அபயக்குரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர்: தனது காம வெறியை தீர்த்துக்கொண்ட கயவன், மூதாட்டி தன்னை விட்டுவிடுமாறு கூறியும் பலனில்லாது கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறார். பின் மூதாட்டியின் அபயக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துவிட, அமித் கவுதம் அங்கிருந்து தப்பி சென்றார். பின் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பலாத்காரம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட வழக்கில் கைது: சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மூதாட்டியை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அதிகாரிகள், அமித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அமித்தின் மீது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 376 பாலியல் பலாத்காரம், 325 வலுக்கட்டாயப்படுத்தி நபரை துன்புறுத்துதல், 452 வீட்டில் அத்துமீறி நுழைந்து காயப்படுத்துதல் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர்.