ஜூலை 12, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், யஷ்வந்த்பூர் கெளதம் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் Aeronics Internet Company.
இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருபவர் வினு குமார் (Chief Executive Officer - CEO) Vinu Kumar). நிர்வாக இயக்குனராக வேலை பார்ப்பவர் பாநின்ற சுப்பிரமணியா (Phanindra Subramanya).
நேற்று மாலை நேரத்தில் நிறுவனத்தின் சி.இ.ஓ மட்டும் எம்.டி ஆகியோரை நேரில் சந்திக்கச்சென்ற முன்னாள் பணியாளர் பெலிக்ஸ் (Felix) என்பவர், வினு மற்றும் சுப்பிரமணியா ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார். Salem Shocker: அன்பு மனைவி விவாகரத்து., ஆசை நாயகியை கரம்பிடித்த சேலம் இளைஞருக்கு 3 மாதங்களில் காத்திருந்த அதிர்ச்சி.. விபரம் உள்ளே.!
பெலீக்ஸுடன் இருவர் வருகை தந்திருந்த நிலையில், அவர்களும் வெறிச்செயலில் ஈடுபட்டு மூவருமாக தப்பி சென்றனர். தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், பெலிக்ஸ் வேலைகளை கற்றுக்கொண்டு தனியாக முதலீடு செய்து நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அதனை அழிக்கும் எண்ணத்துடன் வினு மற்றும் சுப்பிரமணியா நடவடிக்கை எடுத்ததாக தெரியவருகிறது.
இதனால் விரக்தியடைந்த பெலிக்ஸ் கொலை வெறி சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது தெரியவந்தது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது.