Salem Omalur Marriage Scam Girl Rachitha

ஜூலை 12, ஓமலூர் (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், எம். செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). இவர் சொந்தமாக நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசித்த என்ற பெண் கணக்கில் இருந்து நட்பு அழைப்பு வந்துள்ளது. அதனை மூர்த்தியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் நட்பு ரீதியாக பேசி வந்ததாக கூறப்படும் நிலையில், இருவரும் நேரில் தனிமையில் சந்தித்தும் பேச தொடங்கி இருக்கின்றனர். பின் காதல் வயப்பட்டு, கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி இருவரும் ஓமலூர் ஈஸ்வரன் கோவிலை மாலை மாற்றி, தாலிகட்டி திருமணம் செய்துகொண்டனர்.

இதனிடையே, மூர்த்தி தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், "இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகமான அழகுக்கலை நிபுணர் ரசிதா என்பவரை நான் காதலித்து திருமணம் செய்தேன். இருவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். கடந்த ஜூலை 5ம் தேதியில் இருந்து அவரை காணவில்லை.

கூடுதலாக வீட்டில் இருந்த 4 சவரன் நகைகள், ரூ.1.50 இலட்சம் பணம் ஆகியவை மாயமாகி இருக்கிறது. அவரை கண்டறிந்து தரவேண்டும்" என கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்டமாக ரஷிதாவின் சமூக வலைதள கணக்கை ஆய்வு செய்தனர். Chat GPT Down: சர்வதேச அளவில் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்டது சாட் ஜிபிடி; ட்விட்டரில் இணையவாசிகள் போர்க்கொடி.!

அப்போது, ரசிதா முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெவ்வேறு கணக்குகள் கொண்ட பெயரில் இயங்கி, வசதியான ஆண்களை தனது வலையில் விழவைத்து திருமணம் செய்து பணம்பறிக்கும் செயலில் ஈடுபட்டதும் அம்பலமானது. அதேபோல, அவர் பல ஆண்களோடு சேர்ந்து ஆபாச செட்டிங் செய்தும் இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் சொகுசு காருடன், இருசக்கர வாகனத்தில் பியூட்டியாக போஸ் கொடுத்த ரஷிதாவை பலரும் விரும்பி இருக்கின்றனர். அவரின் வலையில் விழுந்த பல மீன்களில் மூர்த்தியும் சிக்கி இருக்கிறார். மூர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில், அவர் திடீர் காதலியின் மீது கொண்ட ஆசையால் தனது மனைவியை விவாகரத்தும் செய்து இருக்கிறார்.

இதற்கிடையில், ஜூன் 20ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வயதுடைய இளம்பெண், தனது கணவர் சத்யா கணேஷ் மற்றும் ரக்ஷிதாவுடன் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதாக கூறியுள்ளார். இந்த புகாரின் பேரிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் துறையினரின் விசாரணையில் ரஷிதா தற்போது வரை மூர்த்தி உட்பட 8 பேரை ஏமாற்றி இருக்கலாம் என்று தெரியவருகிறது. அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருப்பதால், அவரை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற காவல் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.