Women Died Toilet: இரயில் கழிவறையில் 25 வயது பெண்ணின் சடலம்; நடந்தது என்ன?.. பராமரிப்பு பணியில் பதறிப்போன இரயில்வே அதிகாரிகள்.!

இரயில்வே பணியாளர்கள் தங்களின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டபோது, பெட்டியில் இருக்கும் கழிவறையில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம் இருந்தது. 

Women Died Toilet: இரயில் கழிவறையில் 25 வயது பெண்ணின் சடலம்; நடந்தது என்ன?.. பராமரிப்பு பணியில் பதறிப்போன இரயில்வே அதிகாரிகள்.!
Shramjeevi Express (Photo Credit: Wikipedia Commons)

செப்டம்பர் 02, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் நகரையும் - புதுடெல்லியையும் இணைக்கும் வகையில் ஷ்ரம்ஜீவி (Shramjeevi Express) இரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. 12392 எண் கொண்ட இரயில் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று இரயிலின் கழிவறையில், இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இரயில் ராஜ்கிர் இரயில் நிலையத்திற்கு காலை 10:30 மணிக்கு வருகை தந்தது. பின் 11:30 மணியளவில், இரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதற்கான யார்டில் இரயில் நிறுத்தப்பட்டது.

அப்போது, இரயில்வே பணியாளர்கள் தங்களின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டபோது, EC16414C பெட்டியில் இருக்கும் கழிவறையில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம் இருந்தது. பெண்மணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவாறு துப்பட்டா இருந்தது. Tiruppur Crime: 3 ஆண்டுகள் உயிருக்கு உயிராக காதல்.. கருத்து வேறுபாட்டால் காதலியின் கழுத்தை கறகறவென அறுத்து கொலை; துடிதுடிக்க பயங்கரம்.!

பெண் அமர்ந்த நிலையில் உயிரிழந்தவாறு சடலமாக இருந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இரயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்ததால் பேரில், நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரயில் பெட்டியில் பெண் உண்மையில் தற்கொலை செய்துகொண்டாரா?. அவரை கொலை செய்து தற்கொலையாக பாவித்துள்ளாரா? உயிரிழந்த பெண்மணி யார்? என்ற பல கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

(The above story first appeared on LatestLY on Sep 02, 2023 12:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).