செப்டம்பர் 02, திருப்பூர் (Tiruppur Crime News): வேலைக்கு சென்ற மகள் வீட்டிற்கு வருவார் என காத்திருந்த பெற்றோருக்கு காதில் இடியாய் இறங்கிய மரணச்செய்தி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
திருப்பூர் (Tiruppur) மாவட்டத்தில் உள்ள அவிநாசி (Avinashi) பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரின் மகள் சத்ய ஸ்ரீ (வயது 21). திருப்பூரில் (Tiruppur) உள்ள குமார் நகர் 60 அடி சாலையில் செயல்பட்டு வரும் குழந்தைகளுக்கான தனியார் மருத்துவமனையில், வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடலூர் (Cuddalore) மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்குடியை (Kattumannarkudi) சேர்ந்தவர் நரேந்திரன் (வயது 25). நரேந்திரன் - சத்ய ஸ்ரீ இடையே ஏற்பட்ட பழக்கமானது, இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்துள்ளது. இதனையடுத்து, இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். SK 21 Updates: காஷ்மீரில் 75 நாள் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த SK 21 படக்குழு: சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகும் புகைப்படம்.!
காதல் ஜோடி (Love) செல்போனில் பேசியும், சில நேரம் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து இருக்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே காதல் ஜோடியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சத்ய ஸ்ரீ தனது காதலர் நரேந்திரனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
நேற்று காலை நேரத்தில் சத்ய ஸ்ரீ வேலைபார்க்கும் மருத்துவமனைக்கு சென்ற நரேந்திரன், காதலியுடன் கடுமையான வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்ற நரேந்திரன், தான் திட்டமிட்டு மறைத்து எடுத்துச்சென்ற கத்தியை எடுத்து சத்ய ஸ்ரீயின் கழுத்தை கத்தியால் அறுத்து இருக்கிறார்.
இரத்த வெள்ளத்தில் சத்ய ஸ்ரீ கீழே சரிந்து விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து, பின் திருப்பூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உயிருக்கு போராடிய நரேந்திரனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
சத்ய ஸ்ரீயின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சத்ய ஸ்ரீயின் குடும்பத்தினர், மருத்துவமனைக்கு விரைந்து மகளின் உடலை கட்டியணைத்து கதறியழுத்து காண்போரை கலங்க செய்தது.
நரேந்திரனின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதால், அவரால் பேச இயலவில்லை. சிகிச்சை நிறைவு பெறும் வரையில் அதிகாரிகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.