School Boy Dies: பூரி தொண்டையில் சிக்கி மாணவர் பலி.. பெற்றோர் பரிதவிப்பு..!

தெலுங்கானாவில் ஒரே நேரத்தில் 3 பூரிகளைச் சாப்பிட முயன்றபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

School Boy Dies: பூரி தொண்டையில் சிக்கி மாணவர் பலி.. பெற்றோர் பரிதவிப்பு..!
Puri | Dead Body File Pic (Photo Credit: Pixabay)

நவம்பர் 27, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் (Secunderabad) உள்ள ஒரு தனியார் பள்ளியில் வீரேன் ஜெயின் என்ற மாணவர் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், வழக்கம் போல வீட்டில் இருந்து எடுத்து வந்த உணவை மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டுள்ளார். ஒரே நேரத்தில் 3 பூரிகளை சாப்பிடும் போது, தொண்டையில் சிக்கி உடனே மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. Cigarette In Biryani: தம் பிரியாணி கேட்டதற்கு, 'தம்முடன்' பிரியாணி கொடுத்த ஹோட்டல்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!

உடனடியாக, சிறுவனை மீட்டு அருகே உள்ள கிளின்க்கிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து, தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதன்பின்னர், சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).