Cigarette In Biryani: தம் பிரியாணி கேட்டதற்கு, 'தம்முடன்' பிரியாணி கொடுத்த ஹோட்டல்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!

ஐதராபாத்தில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு தட்டில் சிகரெட் துண்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cigarette In Biryani: தம் பிரியாணி கேட்டதற்கு, 'தம்முடன்' பிரியாணி கொடுத்த ஹோட்டல்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!
Cigarette In Biryani (Photo Credit: @TV9Telugu X)

நவம்பர் 26, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் (Hyderabad) உள்ள பிரபல உணவகங்களில் ஒன்றான பவார்ச்சி ஹோட்டல் ஆர்டிசி கிராஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் பிரியாணி (Biryani) சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர் தட்டில், ​​சிகரெட் துண்டு (Cigarette) சிக்கியது. இதனால் அந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தார். Road Accident: சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து.. 2 வயது குழந்தை உட்பட தமிழர்கள் 5 பேர் பரிதாப பலி..!

இதனையடுத்து, ஹோட்டல் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஹோட்டலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சற்று நேரத்தில் வாடிக்கையாளர்கள் அனைவரும் நிர்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ:

(The above story first appeared on LatestLY on Nov 26, 2024 03:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).