Demolition Of Bakery With Bulldozer: 12 வயது சிறுமி பலாத்காரம்; குற்றவாளிக்கு ஆப்படித்த மாநில அரசு.. விவரம் இதோ..!

உத்தர பிரதேசத்தில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் பேக்கரியை ஜேசிபி கொண்டு இடிக்கும் பணிகள் தொடங்கியது.

Demolition Of Bakery With Bulldozer: 12 வயது சிறுமி பலாத்காரம்; குற்றவாளிக்கு ஆப்படித்த மாநில அரசு.. விவரம் இதோ..!
Demolition Of Bakery With Bulldozer (Photo Credit: @PoliticalViewsO X)

ஆகஸ்ட் 03, அயோத்தி (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி புரகலாந்தர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் (Rape) செய்யப்பட்டார். சிறுமி கர்ப்பமானதை அறிந்த பிறகு, அவரது தாய் விசாரித்து, மொய்த் கான், ராஜூகான் ஆகிய இருவர் மீது கடந்த ஜூலை 30-ஆம் தேதி அன்று, புரகலாந்தர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இச்சம்பவம் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் (UP CM Yogi Adityanath) கவனத்திற்கு சென்றது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நேற்று முன்தினம் முதல்வரை சந்தித்த நிலையில், புரகலாந்தர் காவல்நிலைய பொறுப்பு அலுவலர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். சிறுமியை பலாத்காரம் செய்த மொய்கான், ராஜூகான் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இதுதொடர்பாக, சமாஜ்வாதி கட்சி (SP) உறுப்பினரும் பேக்கரி உரிமையாளருமான மொய்த் கான் மற்றும் அவரது ஊழியர் ராஜூ கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். Couple Burnt To Death: இருசக்கர வாகனத்தின் மீது மின்சார கேபிள் அறுந்து விழுந்து விபத்து; தம்பதி உடல் கருகி சாவு..!

இதுகுறித்த விசாரணையில், மொய்த் கான் பேக்கரி (Bakery) ஒன்று நடத்தி வருகிறார். அங்கு 12 வயது சிறுமியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரும், அங்கு ஊழியராக பணியாற்றி வரும் ராஜூ கான் என்பவரும் சேர்ந்து பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், சிறுமி கர்ப்பமடைந்ததால், விஷயம் வெளியில் வர அவரது தாய் புகார் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பேக்கரி சட்டவிரோதமாக நடைபெற்று வந்துள்ளது தெரியவந்ததை அடுத்து, உணவு பாதுகாப்புத் துறையால் சம்மந்தப்பட்ட பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டு, பேக்கரியை மாவட்ட நிர்வாகம் ஜேசிபி (JCB) கொண்டு இடிக்கும் பணிகள் இன்று தொடங்கியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).