Himani Narwal Murder Case (Photo Credit: @PTI_News X)

மார்ச் 04, சண்டிகர் (Haryana News): அரியானா மாநிலம், ரோதக்கில் (Rohtak) காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஹிமானி நர்வால் (வயது 22) கொடூரமாக கொலை (Murder) செய்யப்பட்டு, அவரது உடல் சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த விசாரணையில், காவல்துறையினர் சச்சின் என்ற நபரை நேற்று (மார்ச் 03) கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் மொபைல் போன் சார்ஜிங் வயரால் அவரைக் கொன்று, உடலை சூட்கேஸில் வைத்து வீசியது தெரியவந்தது. Husband Dies By Suicide: மனைவியின் தொல்லை தாங்க முடியாததால்.. கணவர் எடுத்த விவரீத முடிவு..!

சிசிடிவி காட்சி:

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஜஜ்ஜார் பகுதியை சேர்ந்த சச்சின், பணம் தொடர்பான தகராறு காரணமாக காங்கிரஸ் பிரமுகரை கொன்றதாக அரியானா காவல்துறையினர் கூறினர். அவர், கொலை செய்யப்பட்ட பெண்ணின் நண்பர் என்றும், ரோதக்கில் உள்ள அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்வார் என்றும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. தற்போது, அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், குற்றம்சாட்டப்பட்ட சச்சின் ஒரு கருப்பு சூட்கேஸில் பெண்ணின் உடலை எடுத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

வீடியோ இதோ: