Kite Festival: தனது தொண்டர்களோடு பட்டம் விட்டு, குழந்தை போல மகிழ்ந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா..!
உலகளவில் கவனிக்கப்படும் பட்டம் விடும் திருவிழாவில், தனது தொண்டர்களோடு மத்திய உள்துறை அமைச்சர் பட்டம் விட்டு மகிழ்ந்தார்.
ஜனவரி 14: குஜராத் மாநிலத்தில் ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் சர்வதேச அளவில் கவனம் பெறுவது குஜராத்தின் பட்டம் (Kite Festival) விடும் திருவிழா தான். Kanchipuram College Girl Gang abused: கல்லூரி மாணவி காதலன் கண்முன் 5 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு..!
ஆங்கில ஆண்டின் தொடக்கத்தில் புத்தாண்டை கொண்டாடும் மகிழ்ச்சியுடன் 14ம் தேதி குஜராத்தில் எப்போதும் பட்டம் விடும் திருவிழா சிறப்பிக்கப்படும். அங்குள்ள வதோதரா, வட்நகர், சோம்நாத், ராஜ்கோட், டோலெரா, தொர்டோ ஆகிய நகரங்களில் இன்று திரும்பும் இடமெல்லாம் பட்டம் தென்படும்.
குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah, Ministry of Home Affairs), இன்று அகமதாபாத் நகரில் உள்ள வேஜல்பூர் பகுதியில், வீட்டின் மொட்டை மாடியில் தனது தொண்டர்களுடன் பட்டம் விட்டு மகிழ்ச்சியடைந்தார்.