நவம்பர் 22, சென்னை (Cooking Tips Tamil): நம்மில் பலருக்கும் மீன் வகை உணவுகள் பிடித்த ஒன்றாக தற்போது வரை இருக்கிறது. அதிலும் குறிப்பாக இறால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று கூறலாம். ஏனெனில் இறால் வகைகளில் முள் என்பது இருக்காது. உடலுக்கு குளிர்ச்சி தந்து பல நன்மைகளை அளிக்கவும் மீன் வகை உணவுகள் உதவுகிறது. பெரும்பாலும் இறாலை வைத்து பிரியாணி, வறுவல், கிரேவி செய்து பார்த்திருப்போம். இன்று வீட்டிலேயே இறாலில் சுவையான தொக்கு செய்வது எப்படி? என இந்தப்பதிவில் காணலாம். Health Warning: குழந்தைக்கு முத்தமிடுவதால் வைரஸ் தொற்று அபாயம்.. பெற்றோர்களே கவனம்.!
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 2
இறால் - 1/2 கிலோ
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 3/4 தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கேற்ப
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
- முதலில் இறாலை குடல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறவும்.
- அடுத்ததாக தக்காளி சேர்த்து தேவைக்கேற்ப உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் சுத்தம் செய்து வைத்த இறாலை சேர்த்து நன்கு கிளறி கரம் மசாலா சேர்த்து வேக விடவும்.
- இறால் வெந்ததும் கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான இறால் தொக்கு தயார். சப்பாத்தி, சாதத்துடனும் சேர்த்தும் சாப்பிடலாம்.