Bigg Boss 9 Eviction Update (Photo Credit : @SriniMama1 X)

நவம்பர் 22, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9)ல், இதுவரை 45 நாட்கள் கடந்துள்ளன. பிக்பாஸ் இல்லத்திலிருந்து இதுவரை பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன் ராஜ், துஷார், திவாகர் ஆகியோர் எவிக்சன் (Bigg Boss Tamil Eviction) முறையில் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். நந்தினி தனக்கு போட்டியின் தன்மை மன உளைச்சலை தருவதாக தானாக முன்வந்து வெளியேறினார். பிக் பாஸ் 9 சீசன் தமிழ் நிகழ்ச்சியில் எல்லை மீறிய பேச்சுகளும், எல்லை மீறிய செயல்களும் தொடர்ந்து வந்ததால் பெரும்பாலான மக்கள் அதனை பார்ப்பதையும் தவிர்த்து வருகின்றனர். இந்த வாரத்தை பொறுத்தவரையில் கடுமையான வாக்குவாதங்கள், புறம் பேசுவது, தவறான புரிதல்கள், சவாலான டாஸ்க்குகள் என பிக் பாஸ் வீடு பரபரப்பாக இருந்தது. Premji Daughter: அழகிய பெண் குழந்தைக்கு தந்தையானார் நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி.. குவியும் வாழ்த்துக்கள்.!

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?

இதனை தொடர்ந்து இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி திவ்யா மற்றும் சாண்ட்ரா செய்த தவறுகளை சுட்டிக்காட்டுவாரா? என சந்தேகிக்கப்பட்டது. சாண்ட்ரா தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாக செய்யவில்லை என நெட்டிசன்கள் தரப்பில் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதியும் அதையே கூறியுள்ளார். மேலும் ஷோ உங்களால் மட்டும் நடக்கவில்லை. அது உங்களுக்கு புரிகிறதா? இல்லையா? என கேள்வி எழுப்பினார். திவ்யா எஸ்கேப் ஆகிவிட்டார் என தெரிவிக்கும் போது, திவ்யா இடையில் குறுக்கிடவே கடுப்பான விஜய் சேதுபதி நான் உங்களிடம் பேசவில்லை. கொடுத்த வேலையை ஒழுங்காக செய்ய வக்கில்லை. எனக்கு உங்களிடம் பேச விருப்பமில்லை என தெரிவித்தார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ விஜய் தொலைக்காட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாரம் சனிக்கிழமையில் சாண்ட்ரா, திவ்யா இருவரையும் விஜய் சேதுபதி கேள்வி கேட்டு ரோஸ்ட் செய்து இருப்பார். இதனிடையே பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போவது யார்? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அந்த வகையில் இந்த வாரம் கெமி (Bigg Boss Kemy) வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

திவ்யா & சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி: