Chennai Shocker: கல்லூரி மாணவியான காதலியை கழுத்தை நெரித்து கொன்ற காதலன்: அறை எண் 201ல் நடந்தது என்ன?.. வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ்.. பதறவைக்கும் சம்பவம்.!
காதலில் விழுந்து குழந்தை பெற்றெடுத்த சிறுமி, கல்லூரி மாணவியாக மாறினாலும் காதலனின் காம எண்ணத்தால் பல பெண்களுக்கு வலைவீசியது அம்பலமாகி, அது குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணின் கதையை முடித்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிப்பருவ காதலில் 16 வயதில் விழுந்த சிறுமியின் வாழ்க்கையோடு, உயிரும் 20 வயதில் முடிந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
டிசம்பர் 02, சென்னை (Chennai): கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் பௌசியா (வயது 20), இவர் சென்னையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்து, கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் (Nursing College Student) பயின்று வந்துள்ளார். இவரின் காதலர் ஆஷிக். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
காதலன் வருகை: சம்பவத்தன்று தன்னை காதலன் பார்க்க வருவதாகவும், இருவரும் குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் குரோம் ரெசிடென்சியில் அறையெடுத்து தங்குவதாகவும் பௌசியா தனது தோழிகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். 3 நாட்களாக கல்லூரிக்கு கூட பௌசியா வரவில்லை. காதல் ஜோடி விடுதியிலேயே இருந்துள்ளது.
தோழிகளின் தகவல்: இந்நிலையில், ஆஷிக் தனது காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டதாக வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பௌசியாவின் தோழிகள், குரோம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் பௌசியாவின் தோழிகள் தெரிவித்த குரோம் ரெசிடென்ஸிக்கு அதிகாரிகள் விரைந்தனர்.
அறை எண் 201ல் கொடூரம்: அங்கு காதல் ஜோடி தங்கியிருந்த அறை எண் 201ல் சோதித்தபோது, பௌசியா கழுத்தை நெரித்து கொலை செய்தவாறு சடலமாக மீட்கப்பட்டார். உடனடியாக அவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பௌசியாவை கொலை செய்த, அவரின் காதலன் ஆஷிக்கை அதிகாரிகள் தேடிவந்தனர். Salaar Part 1 The Ceasefire Trailer: மரண மாஸ் ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது சலார் திரைப்படத்தின் டிரைலர்.. அடித்து நொறுக்கும் பிரபாஸ்.! வீடியோ உள்ளே.!
அதிர்ச்சி உண்மை அம்பலம்: பல்லாவரத்தில் அவர் பதுங்கியிருப்பது உறுதியாகவே, அங்கு விரைந்த காவல் துறையினர் ஆஷிக்கை கைது செய்தனர். விசாரணையில், பள்ளிப்பருவ காதலில் குழந்தை பெற்றது, இறுதியில் கொலை நடந்த அதிர்ச்சி தகவல் உறுதி செய்யப்பட்டது.
பள்ளிப்பருவ காதல்: அதாவது, ஆஷிக் - பௌசியா பள்ளிப்பருவத்தில் காதல் வயப்பட்டுள்ளனர். இதனால் 16 வயதிலேயே பௌசியா குழந்தை பெற்றெடுத்து இருக்கிறார். இது தொடர்பாக கேரளா காவல் நிலையத்தில் ஆஷிக் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் குழந்தை கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஆசிரமம் ஒன்றிலும் வளர்ந்து வருகிறது.
மன்மத காதலனின் லீலை அம்பலமானதால் கொலை: இதனிடையே, ஆஷிக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரியவருகிறது. இந்த விவகாரம் பௌசியாவுக்கு தெரியவரவே, விடுதியில் தங்கியிருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அச்சமயம் ஆத்திரத்தில் காதலியை கொலை செய்த ஆஷிக், அங்கிருந்து தப்பிச்சென்று கொலையை வாட்ஸப்பில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இந்த உண்மையை விசாரணையில் அறிந்த காவல் துறையினர், ஆஷிக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
(The above story first appeared on LatestLY on Dec 02, 2023 08:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

