Chhattisgarh Naxals Attcak Visual From Video (Photo Credit: @ANI Twitter)

ஏப்ரல் 27, தண்டேவாடா (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா (Dantewada, Chhattisgarh) மாவட்டத்தில் நேற்று நக்சல்களின் (Chhattisgarh Naxals Attack) தாக்குதலில் 10 காவல் துறையினர் மற்றும் 1 ஓட்டுநர் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலை அறிந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, உடனடியாக மாநில முதல்வர் பூபேஷ் பாகலை தொடர்பு கொண்டு பேசி நிலைமை குறித்து கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்.

தண்டேவாடா மாவட்டத்தின் பால்நர் பகுதியில் நடைபெற்ற கோர சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், தாக்குதலுக்கு பின் வெளியான புகைப்படங்கள் ஒவ்வொருவரையும் அதிரவைத்தது. முழுநீள தார்சாலையே சிதைந்து, அதிகாரிகள் சென்ற வாகனம் உருக்குலைந்து காணப்பட்டன. Vijay & Vishal: இளையதளபதி விஜய் – நடிகர் விஷால் நேரில் சந்திப்பு; ரசிகர்கள் கொண்டாட்டம்.! 

சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டு ஐ.இ.டி ரக வெடிகுண்டை வைத்து நக்சல்கள் நாச வேலையில் ஈடுபட்டது உறுதியானது. இந்நிலையில், சம்பவ இடத்தில் நக்சல்களின் தாக்குதலின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் ஏ.என்.ஐ ஊடகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.