ஏப்ரல் 27, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய் (Vijay). இவரை இளையதளபதி, தலைவா என்று ரசிகர்கள் அழைப்பார்கள். இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியானதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் உருவாகி வரும் லியோ (Leo) திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அடுத்தகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல, தமிழ் திரைப்பட சங்கத்திற்காக இன்று வரை போராடி வரும் ஒருவராக இருக்கும் விஷால் (Vishal), தன்னால் இயன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். AR Rahman Latest: “தமிழ் ல பேசும்மா” மனைவியை அன்புடன் கண்டித்த ஏ.ஆர். ரஹ்மான்.. காதல் பாடல்கள் குவிய இதுவும் காரணமா?..!

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான லத்தி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. இவரின் நடிப்பில் மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில், நடிகர் விஜயும் - விஷாலும் நேரில் சந்தித்துக்கொண்டுள்ளனர். இருவரின் திடீர் சந்திப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.