Road Accident: லாரி - வேன் மோதி பயங்கர விபத்து.. பச்சிளம் குழந்தை, பெண்மணி உட்பட 6 பேர் பரிதாப பலி.!

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பிக்கப் வேனின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

Road Accident: லாரி - வேன் மோதி பயங்கர விபத்து.. பச்சிளம் குழந்தை, பெண்மணி உட்பட 6 பேர் பரிதாப பலி.!
Accident (File Pic)

மே 15, சத்தீஸ்கர் (Chhattisgarh News): சத்தீஸ்கர் (Chhattisgarh) மாநிலத்தில் உள்ள பலோடா பஸார் மாவட்டம், பலாரி பகுதியில் கோடா பாலம் உள்ளது. இந்த பாலத்தில் நேற்று பிக்கப் வேன் - லாரி (Pickup Van - Truck) பயணம் செய்துகொண்டு இருந்தது.

இந்நிலையில், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பிக்கப் வேனின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் பிக்கப் வேனில் பயணம் செய்த பச்சிளம் குழந்தை, பெண்மணி உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். Vijaya Health Center Suicide: மகளை கொலை செய்து தாய் தற்கொலை; கணவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் இல்லாததால் மருத்துவமனையிலேயே விபரீதம்.!

பிக்கப் வேனில் மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், எதிர்பாராத விபத்தால் உயிர் சேதம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த பலாரி காவல் துறையினர், பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் காயம் அடைந்தோர் சிகிச்சைக்காக பாலோடா பஸார் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

(The above story first appeared on LatestLY on May 15, 2023 09:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).