Chennai Vijaya Health Center | Hanged Death File Pic (Photo Credit: Justdial / Pixabay)

மே 13, சென்னை (Chennai News): ஆந்திர பிரதேசம் (Andhra Pradesh) மாநிலத்தில் உள்ள ஓங்கோல் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹரி கிருஷ்ணன் (வயது 42). இவர் சொந்தமாக மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 29 ம் தேதி ஹரி கிருஷ்ணனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, குடும்பத்தினர் ஹரி கிருஷ்ணனை சென்னை வடபழனியில் (Vadapalani, Chennai) இருக்கும் விஜயா ஹெல்த் சென்டருக்கு (Vijaya Health Center) பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை மற்றும் பரிசோதனையின் முடிவில், ஹரிக்கு மூளையில் இரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது.

இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஹரி கிருஷ்ணனை அவரின் சகோதரர் பிரசாத், மனைவி வெங்கடேசுதா மற்றும் 16 வயது மகள் ஆகியோர் உடன் இருந்து கவனித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் சொந்த ஊர் சென்றவர்கள், நேற்று மீண்டும் சிகிச்சைக்கு வடபழனி வந்தடைந்தனர்.

Crime File Picture (Photo Credit: Pixabay)

அங்கு ஹரிகிருஷ்ணனின் மனைவி மற்றும் மகள் அறையை தாழிட்டு, அங்கிருந்து ஹரியின் சகோதரருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அதில், "கணவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்தும், அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் இல்லை. Karantaka Congress Govt: கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவியேற்பு தேதி, நேரம் தயார்.. யார் முதல்வர்? தொடரும் குழப்பம்., சூடேறும் அரசியல்களம்.!

ஆதலால் நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம் என கூறியுள்ளனர்". இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய நிலையில், அவர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே செல்கையில் தாய்-மகள் தூக்கில் சடலமாக உயிரிழந்து தொங்கியுள்ளனர்.

இந்த விசயம் தொடர்பாக கே.கே நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் மகளை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்று தாய் தற்கொலை செய்துஒண்டர் என்பது அம்பலமானது.

இருவரின் சடலமும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.