நவம்பர் 26, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலம், திருச்சூர் (Thrissur) திரப்பரையார் பகுதியில் சாலையோரம், தமிழர்கள் சிலர் கூடாரம் அமைத்து தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக மரக்கட்டைகள் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை (Lorry Accident) இழந்த லாரி, அதிவேகத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. மேலும், அங்குள்ள தடுப்புச்சுவரில் மோதியது. Woman Raped By YouTuber: இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய யூடியூபர் கைது..!
இதில், அங்கு தூங்கிக் கொண்டிருந்த 4 வயது குழந்தை உட்பட தமிழர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே, அக்கம்பக்கத்தினர் வந்து அவர்களை மீட்டு, திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, லாரி ஓட்டுநர் தூங்கியதால் விபத்து நேரிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, ஓட்டுநர் அலெக்ஸ், அவருடன் இருந்த க்ளீனர் ஜோஸ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த விபத்தில் பலியானவர்கள் காளியப்பன் (வயது 50), நாகம்மா (வயது 39), பங்காசி(20), ஜீவன் (வயது 4) மற்றும் 2 வயது குழந்தை என அடையாளம் காணப்பட்டது. உயிரிழந்த குழந்தை பெயர் விவரம் எதுவும் வெளியாகவில்லை. இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.