Wife Gang Rape: குளிர்பானத்தில் மயக்க மருந்து; மனைவியை நண்பனுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த கணவன்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
ஒயின்ஷாப்பில் அறிமுகமான நண்பனை வீட்டிற்கு அழைத்து வந்து, மனைவிக்கு குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்துகொடுத்து பலாத்காரம் செய்த துயரம் கோவையில் நடந்துள்ளது.
ஜூலை 19, ஒத்தக்கால்மண்டபம் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த 34 வயது நபர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 32 வயதுடைய மனைவி இருக்கிறார். தம்பதிகளுக்கு 9 வயது மகன் இருக்கிறார்.
34 வயது ஓட்டுனருக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 37 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 37 வயதுடைய நபர், காந்திபுரம் பகுதியில் உள்ள மரப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இருவரும் டாஸ்மாக்கில் நண்பர்களானதாக தெரியவருகிறது. ஜூலை 17 அன்று இருவரும் ஒன்றாக சேர்ந்து மதுபானம் அருந்திய நிலையில், 32 வயதுடைய நபர் தனது நண்பரை இரவு 10 மணியளவில் போதையில் தள்ளாடியபடி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். Project K: நடிகர் பிரபாஸின் அட்டகமான தோற்றம்; ப்ராஜக்ட் கே படத்தின் வைரல் அப்டேட் இதோ.!
வீட்டில் தனது மனைவியை போதையில் தனது நண்பரோடு சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். முதலில் மனைவிக்கு ஆசையாக குளிர்பானம் கொடுப்பதுபோல, அதில் மதுபானம் கலந்து கொடுத்து அத்துமீறியது தெரியவந்துள்ளது.
நள்ளிரவு 12 மணியளவில் பெண் நிலைமை தெரியவந்து கூச்சலிட, அங்கிருந்து குற்றவாளிகள் இருவரும் தப்பி சென்றுள்ளனர். போதை ஆசாமிகளின் கொடூர செயலால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்மணி, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியானார்.
அங்கு விபரத்தை அறிந்துகொண்ட மருத்துவர்கள் செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணிடம் விசாரணை செய்து, புகாரை பெற்று அவரின் கணவர் மற்றும் கணவரின் நண்பரை கைது செய்தனர்.
(The above story first appeared on LatestLY on Jul 19, 2023 05:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

