Project K: நடிகர் பிரபாஸின் அட்டகமான தோற்றம்; ப்ராஜக்ட் கே படத்தின் வைரல் அப்டேட் இதோ.!
கடந்த 2020ல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக திரைப்படத்தின் பணிகள் தள்ளிப்போய், தற்போது அவை விறுவிறுப்புடன் நடைபெறுகிறது.
ஜூன் 19, சென்னை (Cinema News): நாக் அஸ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில், ரூ.600 கோடி பொருட்செலவில் உருவாகும் திரைப்படம் ப்ராஜக்ட் கே (Project K). படம் ரூ.600 கோடி செலவில் தயாராவதால் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக படம் உருவாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
இப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன், திசா பெதானி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இன்னும் பல திரையுலக பிரபலங்கள் ப்ராஜக்ட் கே படத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. தெலுங்கு மொழியில் தயாரிக்கப்படும் ப்ராஜக்ட் கே, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் வெளியாகிறது. Tirupati – Thiruvananthapuram Train: திருப்பதி – திருவனந்தபுரம் விரைவு இரயில் பெட்டி தடம்புரண்டு விபத்து; பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!
கடந்த 2020ல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக திரைப்படத்தின் பணிகள் தள்ளிப்போயின. தற்போது படம் முழுவதும் படம்பிடிக்கப்பட்டு, பிற பணிகள் அனைத்தும் நிறைவடைந்து 12 ஜனவரி 2024 அன்று படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
படத்தில் நடிகை தீபிகா படுகோனின் அசத்தல் புகைப்படம் சமீபத்தில் படக்குழுவால் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது நடிகர் பிரபாஸின் அட்டகாசமான தோற்றத்தின் புகைப்படம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. படத்தின் புகைப்படங்களை வைத்து பார்க்கையில், அவை கற்களை கதையுடன் - எதிர்காலத்தை தொடர்புபடுத்தி எடுக்கப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
(The above story first appeared on LatestLY on Jul 19, 2023 04:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

