College Student Drowning Swimming Pool: நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி..! சக மாணவர்கள் போராட்டம்..!

ராஜஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

College Student Drowning Swimming Pool: நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி..! சக மாணவர்கள் போராட்டம்..!
Water Death (Photo Credit: Pixabay)

ஜூன் 28, ஜெய்ப்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலம், நீம் கா தானா மாவட்டத்தை சேர்ந்த விகாஸ் யாதவ் (வயது 21), ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி முதுகலைப் பட்டம் பயின்று வருகிறார். இவர், பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நீச்சல் வகுப்பில் சேர்ந்துள்ளார். இந்நிலையிலம் நேற்று மாலை அங்கு நீச்சல் குளத்தில் (Swimming Pool) பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த போது, திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். Baby Mysterious Death: பிறந்த ஒரு மாத குழந்தை மர்ம மரணம்; காவல்துறையினர் தீவிர விசாரணை..!

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விகாஸின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கொண்டு சேர்த்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் உயிரிழந்ததை அடுத்து, நேற்று இரவு ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வீட்டை முற்றுகையிட்டு, நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

இந்த சம்பவத்தின் போது, பயிற்சியாளர் உடன் இல்லை எனவும், பல்கலைக்கழகத்தின் அலட்சியமே மாணவரின் மரணத்திற்கு காரணம் என சக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jun 28, 2024 12:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).