Baby Mysterious Death: பிறந்த ஒரு மாத குழந்தை மர்ம மரணம்; காவல்துறையினர் தீவிர விசாரணை..!

கடலூரில் ஒரு மாத குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Baby Mysterious Death: பிறந்த ஒரு மாத குழந்தை மர்ம மரணம்; காவல்துறையினர் தீவிர விசாரணை..!
Baby Death - File Pic (Photo Credit: Pixabay)

ஜூன் 28, கடலூர் (Cuddalore News): கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கொடிக்களம் கிராமத்தை சேர்ந்த தம்பதி சக்திவேல்-நந்தினி. இத்தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகனும், பிறந்த ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளனர். சக்திவேல், அந்தமான் தீவில் வேலை பார்த்து வந்துள்ளார். நந்தினி, கொடிக்களம் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்.

இந்நிலையில், தனது வீட்டுக்கு முன்பு முற்றத்தில் குழந்தையை படுக்க வைத்து, வீட்டு பின்புறமுள்ள கழிவறைக்கு சென்ற நந்தினி, மீண்டும் வந்து பார்த்தபோது குழந்தையின் அருகே இரண்டு நாய்கள் நின்று கொண்டிருந்ததைக் கண்ட அவர், நாயை விரட்டி விட்டு குழந்தையை தூக்கிப் பார்த்துள்ளார். அப்போது, குழந்தை (Baby Death) மூச்சின்றி இருந்ததால், அவர் அழுதபடி பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். Mini Bus-Lorry Accident: லாரி மீது மினி பேருந்து மோதி பயங்கர விபத்து; 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி..!

இதனையடுத்து, குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்று அவசரம் அவசரமாக இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவினன்குடி காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குழந்தையின் உடலில் நாய் கடித்ததற்கான பெரிய காயங்கள் எதுவும் இல்லை. குழந்தையின் கழுத்தில் இருந்த கயிறு இறுக்கியவாரு இருந்தது பல சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, குழந்தை நாய் கடித்து இறந்ததா? அல்லது கழுத்து இறுக்கபட்டு இறந்ததா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர், குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jun 28, 2024 11:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).