ஆகஸ்ட் 20, டெல்லி (Delhi News): டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா (Delhi CM Rekha Gupta), இன்று (ஆகஸ்ட் 20) காலை தனது இல்லத்தில் நடைபெற்ற மக்கள் குறை கேட்கும் 'ஜான்சுன்வாய்' நிகழ்ச்சியின்போது, 40 வயது மதிக்கத்தக்க ஒருவரால் தாக்கப்பட்டார். தாக்குதல் நடத்தியவர் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டை சேர்ந்த ராஜேஷ் சக்ரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், இன்று காலை முதல்வர் ரேகா குப்தாவை அணுகி, முதலில் சில ஆவணங்களை கொடுத்துள்ளார். பின்னர், திடீரென அவரின் கன்னத்தில் அறைந்து, தலைமுடியைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ரேகா குப்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 17 வயது சிறுமி கழுத்தறுத்து கொலை.. மர்ம நபருக்கு போலீஸ் வலை..!
டெல்லி முதல்வர் மீது தாக்குதல்:
உடனே, முதலமைச்சரின் பாதுகாப்பு பணியாளர்கள் அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சக்ரியாவின் தாயார் பானு கூறுகையில், அவர் நாய் பிரியர் என்றும், தெருநாய்கள் குறித்த சமீபத்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், தாக்குதலுக்கான உண்மையான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் விசாரணை:
டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.பி.கே. சிங் தலைமையில், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லி முதல்வர் தாக்குதலுக்கு பாஜகவினர் உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு மீறலுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.