ஆகஸ்ட் 19, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ஃபிரோசாபாத் மாவட்டத்திலுள்ள ஜஸ்ரானா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நேகா (வயது 17) என்ற சிறுமி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். சம்பவ நாளன்று, அதிகாலை 4 மணியளவில் யாரோ ஒருவரின் அழைப்பின் பேரில், வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமியின் உடல், கிராமத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் கிடந்துள்ளது. Miss Universe India 2025: மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 அழகியாக 22 வயது இளம்பெண் தேர்வு.. யார் இந்த மணிகா விஸ்வகர்மா..?
சிறுமி கொடூர கொலை:
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை (Murder) மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளியை அடையாளம் காண, சிறுமிக்கு அதிகாலையில் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.