Delhi Metro: உர்பி ஜாவேத் போல உடையணிந்து டெல்லி மெட்ரோவில் பயணிக்கும் இளம்பெண்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!

மேலை நாட்டு கலாச்சார ஆதிக்கம், தனிமனித விருப்பம் போன்றவற்றால் மக்கள் தங்களுக்கு தோன்றும் செயலை எங்கும் தயக்கம் இன்றி செய்து வருகின்றனர்.

Delhi Metro Train Issue (Photo Credit: Twitter)

ஏப்ரல் 04, புதுடெல்லி (Delhi News): இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பல நாடுகளின் தூதரகம், முக்கிய அரசு அலுவலகங்கள், தனியார் துறையின் அலுவலகங்கள் இருக்கின்றன. இங்குள்ள மக்களின் பொதுப்போக்குவரத்தை விரைவாக அணுக மெட்ரோ இரயில் வழித்தடங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில், மெட்ரோ இரயிலில் சமீபமாகவே விரும்பத்தகாத அல்லது மக்களின் முகத்தை சுளிக்க வைக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இரயிலில் பயணம் செய்து வந்த காதல் ஜோடி முத்தம் பரிமாறிக்கொண்ட வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகின. CSK Vs LSG: சென்னை மைதானத்தை அதிரவிட்ட சி.எஸ்.கே அணி.. சொந்த மண்ணில் அசத்தல் வெற்றி.!

இதற்கிடையே பாலிவுட்டில் வித்தியாசமான கவர்ச்சி உடையணிந்து வரும் நடிகை உர்பியின் சாயலில், இளம்பெண் ஒருவர் உடையணிந்து மெட்ரோவில் வளம் வருகிறார். இந்த பயண வீடியோ மற்றும் போட்டோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களும் குவிகின்றன.

ஏற்கனவே இந்தியாவில் பாலின சமத்துவம், தன்பாலின விருப்ப திருமணம் என ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பப்படும் விஷயங்களை பேசி தங்களின் கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், இவ்வாறான செயல்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement