Doctor Umar Mohammad (Photo Credit : @RituRathaur X)

நவம்பர் 18, டெல்லி (Delhi News): இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நவம்பர் 10 ஆம் தேதியன்று மாலை கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து (Red Fort Car Explosion) சிதறியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையின் போது கார் வெடிப்பு சம்பவமானது தற்கொலை படை தாக்குதல் என உறுதி செய்யப்பட்டதால் ஜம்மு, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். Bus Crash: சவூதி அரேபியா விபத்தில் 42 இந்தியர்கள் பலி.. புனித யாத்திரை பயணத்தில் சோகம்.!

தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை:

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையில் கார் வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய மருத்துவர் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்தவர் என உறுதி செய்யப்பட்டது. 36 வயதான மருத்துவர் உமர் முகமது ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஹூண்டாய் ஐ20 கார் மூலம் ஹரியானாவில் இருந்து டெல்லிக்குள் நுழைந்து வெடிக்க வைத்துள்ளார். இவர்கள் தங்கியுள்ள இடங்களை சோதித்த போது வெடிபொருட்களுடன் சுமார் 20 டைமர்கள், ஏகே 47 ரக துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

டெல்லி கார் வெடிப்புக்கு முன் வீடியோ பதிவு செய்த மருத்துவர்:

இந்த நிலையில் டெல்லி கார் வெடிப்பு தாக்குதல் நடப்பதற்கு முன்னதாக தற்கொலை படை தாக்குதலை அரங்கேற்றிய உமர் பேசிய வீடியோவானது தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மருத்துவர் உமர் மிகவும் சாதாரணமாக பேசுகிறார். மேலும் அதில், "தற்கொலைப்படை தாக்குதலை சிலர் தவறாக பேசுகின்றனர். அது உண்மையில் தியாக நடவடிக்கை" என தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் ஆங்கிலத்தில் பேசிய உமர் மதம் சார்ந்த தியாக நடவடிக்கை என்று இளைஞர்களை வசம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவர் முகமது உமர் வீடியோ: