Husband Kills Wife: நடத்தை சந்தேகத்தால் விபரீதம்; 4 குழந்தைகளின் தாயை கொடூரமாக கொன்ற கணவர்.!

7 ஆண்டுகள் திருமணத்தில் அடுத்தடுத்து 3 குழந்தைகள் பிறந்தும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் இறுதியில் அவரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Husband Kills Wife: நடத்தை சந்தேகத்தால் விபரீதம்; 4 குழந்தைகளின் தாயை கொடூரமாக கொன்ற கணவர்.!
Crime File Picture (Photo Credit: Pixabay)

அக்டோபர் 25, புதுடெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள சந்த் பாக் பகுதியை சேர்ந்தவர் உமீத் (வயது 40). இவரின் மனைவி ஷப்னம். தம்பதிகள் இருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

ஷப்னத்திற்கு முதல் திருமணம் நடைபெற்று குழந்தை இருந்த நிலையில், கணவரை இழந்து வாழ்ந்து பின்னாளில் உமீத்தை திருமணம் செய்துள்ளார். உமீத் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

தம்பதிகள் இருவரும் வடமேற்கு டெல்லியில் உள்ள சந்த் பாக், இ-பிளாக் பகுதியில் வசித்து வந்துள்ளனர். கணவரை இழந்து குழந்தையுடன் வசித்து வந்த பெண்மணிக்கு, இரண்டாவது திருமணத்திற்கு பின்னர் 3 குழந்தைகள் பிறந்துள்ளார். Trending Video: அஞ்சலக ஊழியரை சுத்துப்போட்ட நாய்கள்; காவலாளியால் உயிர்தப்பிய பகீர் சம்பவம்.! 

இதனையடுத்து, 4 குழந்தைகளுடன் தம்பதிகள் வீட்டில் வசித்து வந்துள்ளனர். நள்ளிரவு நேரத்தில் உமீத் தனது மனைவி ஷப்னத்தை கொலை செய்ததாக டயல்பூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு மாயமாகியுள்ளார்.

கணவன் தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டதால் கொலை நடந்தது தெரியவந்துள்ளது. சுயநினைவு இன்றி இருந்த ஷப்னத்தை மீட்ட அதிகாரிகள், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள டயல்பூர் காவல் துறையினர், தலைமறைவான உமீத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Oct 25, 2023 03:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).