Dog Attack Post Man (Photo Credit: X)

அக்டோபர் 24, போவாய் (Social Viral): வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் என்னதான் நாம் சொல்வதைக் கேட்டாலும், ஒரு நிலைக்கு மேல் அதனை கட்டுப்படுத்துவது எளிதான காரியமாக இருக்காது.

அதேபோல, மனிதர்களின் மீது விரக்தியை மட்டுமே ஏமாற்றமாக மிஞ்சி காணப்படும் பல்வேறு தெரு நாய்களும், அவ்வப்போது மனிதர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதும் உண்டு.

நாம் உணவுப் பொருட்கள் ஏதேனும் வாங்கி சென்றால், அதன் நறுமணத்தை கண்டறிந்து அந்த உணவை பறிக்க எண்ணி சில நேரம் தாக்குதலும் நடைபெறும்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, போவாய் பகுதியில் அஞ்சலக ஊழியரை தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து தாக்க முயற்சித்தது. Thattapayaru Benefits: தினமும் தட்டையப்பயறு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் தகவல் இதோ.! 

உடனடியாக அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி, தடியை எடுத்து நாய்களை விரட்டியதால் அஞ்சலக ஊழியர் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார்.

அவரை ஐந்து நாய்கள் சுற்றிய போது, ஒரு கணம் அவர் அதிர்ந்தும் போனார். இந்த அதிர்ச்சி காட்சிகள் அங்கிருந்த கேமிராவில் பதிவாகி இருக்கின்றன.