Blind Murder Mystery: மாமாவை கொலை செய்து நாடகமாடிய மருமகன்.. கிடுக்குப்புடி விசாரணையில் சிக்கிய கொலையாளி..!
மத்திய பிரதேசத்தில் தனது மாமாவை குடி போதையில் மருமகன் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 05, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் (Jabalpur) நகரில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி அன்று மாலை, மனோஜ் தாகூர் (வயது 26) என்பவர் தனது மருமகன் தரம் சிங்குடன் (வயது 19) மது அருந்த சென்றுள்ளார். பின்னர், சிங் தனது வீட்டிற்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் தாகூர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். MiG-29 Fighter Jet Crash: வயலில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்.. நடந்தது என்ன..?
இதனையடுத்து, மறுநாள் காலையில் தாகூர் வயலில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், கடைசியாக உடன் இருந்த அவரது மருமகன் தரம் சிங்கை அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் முடிவடைந்த நிலையில், மறுமுறை வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் மீது மட்டும் ஈக்கள் மொய்த்தன.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரது சட்டையை கழற்றி பார்க்கையில் அதில் ரத்தக் கரைகள் இருந்தன. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், சிங் தான் கொலை (Murder) செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Nov 05, 2024 06:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

