நவம்பர் 05, ஆக்ரா (Uttar Pradesh News): பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மிக்-29 போர் விமானம் (MiG-29 Fighter Aircraft) பயிற்சிக்காக உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா (Agra) நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில், இரண்டு விமானிகள் பயணித்தனர். ஆக்ரா அருகே சென்றபோது, விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனையறிந்த விமானிகள், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயன்றனர். Candy Stuck In Throat: தொண்டையில் மிட்டாய் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாப பலி.. குடும்பத்தினர் சோகம்..!
ஆனால், அது பயனளிக்காததால் காகேரோலில் உள்ள சோங்கா கிராமம் அருகே விமானம் சென்றபோது, பாராசூட் உதவியுடன் இருவரும் விமானத்தில் இருந்து குதித்தனர். விமானம் அங்கிருந்த வயலில் விழுந்து நொறுங்கியதுடன் தீப்பிடித்தும் எரிந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதுதொடர்பாக, இந்திய விமானப்படை விபத்துக்கான காரணத்தை கண்டறிய உத்தரவிட்டுள்ளது. விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ, தொலைவில் விமானிகள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கடந்த செப்டம்பர் 02-ஆம் தேதி ராஜஸ்தானின் பார்மரில் மிக்-29 போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியதும், விமானி பாதுகாப்பாக வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.
தரையில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்:
#Breaking A MiG-29 fighter jet has crashed near Agra, Uttar Pradesh. The pilot has ejected from the plane. The plane had taken off from Adampur in Punjab and was en route to Agra for an exercise when the incident happened. More details awaited. Court of Inquiry to be ordered. pic.twitter.com/DUHiiHhVmM
— Sanjay Jha (@JhaSanjay07) November 4, 2024