
ஜனவரி 28, ரங்காரெட்டி (Telangana News): தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி (Ranga Reddy) மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரநகர் மண்டலம், சிவராம்பள்ளி அருகே சாலை விபத்து (Bike Accident) ஏற்பட்டது. அரங்கூர் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அங்குள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானர். இதில், இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். Bhurai Building Collapse: 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; 25 பேரின் கதி என்ன? தலைநகரில் சோகம்.!
பரிதாப பலி:
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர்கள் பகதூர்புராவைச் சேர்ந்த சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ இதோ:
ఫ్లైఓవర్ మీద యాక్సిడెంట్.. ముగ్గురు యువకులు మృతి
రాజేంద్రనగర్ మండలం శివరాంపల్లి వద్ద రోడ్డు ప్రమాదం
ఆరాంఘర్ ఫ్లైఓవర్పై డివైడర్ను ఢీకొన్న ఓ ద్విచక్రవాహనం
ఈ ఘటనలో ఇద్దరు అక్కడికక్కడే మృతి చెందగా.. ఆస్పత్రిలో చికిత్స పొందుతూ మరొకరు మృతి
మృతులను బహదూరుపురాకు చెందిన… pic.twitter.com/tSOG8sXSxh
— BIG TV Breaking News (@bigtvtelugu) January 28, 2025