CBSE Exam Date 2024: சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு... முழுத்தகவல் இதோ...!

சிபிஎஸ்இ பள்ளிகளின் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதிகளை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது.

CBSE Exam Date 2024: சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு... முழுத்தகவல் இதோ...!
CBSE Board Exam 2024 (Photo Credit: @airnewsalerts @upendrrarai x)

டிசம்பர் 12, சென்னை (Chennai): சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு தேதிகளை சிபிஎஸ்இ ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. அதன்படி செய்முறைத் தேர்வு ஜனவரி 1-ல் தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரை நடத்தலாம் என்று கூறியிருந்தனர்.

சிபிஎஸ்சி பொதுத் தேர்வு: இந்நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் 2023 - 2024ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பில் படித்து வரும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் குறித்த புதிய அறிவிப்பினை மத்திய இடைநிலை கல்வி வாரியம்(CBSE) வெளியிட்டுள்ளது. அதன் படி, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Thalaivar 170 Update: தலைவர் 170 படத்தின் அப்டேட் இதோ... வேட்டையனாகிய சூப்பர் ஸ்டார்..!

மேலும் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் 2024 பிப்ரவரி 15ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை நடைபெறும். 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2024 பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெறும். இதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Dec 12, 2023 06:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).