மே 06, புதுடெல்லி (New Delhi): ஐசிஎஸ்இ (ICSE) பாடத்திட்டத்தில் சிஐசிஎஸ்இ (CISCE) என்ற தேசிய அளவிலான தனியார் கல்வி வாரியம் தேர்வை நடத்துகிறது. அந்த வகையில் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதிய மாணவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேசமயம் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2 ஆம் தேதி வரை நடைபெற்றது. 14-year-old Girl Kills Brother In Chhattisgarh: "இனி போன் யூஸ் பண்ணாத.." என்ற அண்ணன்.. கடுப்பில் கோடரியால் வெட்டி கொன்ற தங்கை.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!
தேர்ச்சி விகிதம்: கடந்த ஆண்டு 98.94 சதவீத மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறை 99.47 சதவீத மாணவர்கள் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவிகள் 99.21 சதவீதமும், மாணவர்கள் 98.71 சதவீதமும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு தேர்வில் மாணவிகள் 98.01 சதவீதமும், மாணவர்கள் 95.96 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி அலிகஞ்சில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியைச் சேர்ந்த ரக்ஷிதா லோஹானி (Rakshita Lohani from City Montessori School) ICSE 12ஆம் வகுப்பில் 98.75% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.