Murder (Photo Credit: Pixabay)

மே 06, கேசிஜி (Chhattisgarh): சத்தீஸ்கரின் கைராகர்-சூய்காடன்-கண்டாய் (கேசிஜி) மாவட்டத்தில், 14 வயது சிறுமி, தொடர்ந்து தனது நண்பர்களுடன் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் கடுப்பான அச்சிறுமியின் உடன் பிறந்த 18 வயது அண்ணன், இனி மொபைல் பயன்படுத்தாதே என கண்டித்துள்ளார். இதனால் கடுப்பான சிறுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, தூங்கி கொண்டிருந்த அண்ணனை, கோடரியால் வெட்டி கொன்றுள்ளார். Five Students Drowned In Sea: நாகர்கோவில் அருகே கடல் சீற்றம்.. கடல் அலையில் சிக்கி 3 மாணவிகள், இரு மாணவர்கள் பலி..!

பின்னர், சிறுமி குளித்துவிட்டு, தன் உடையில் இருந்த ரத்தக்கறைகளை சுத்தம் செய்துவிட்டு, அக்கம்பக்கத்தினரிடம் சென்று, தன் சகோதரன் கொலை செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு சிறுமிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் சிறுமி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.