ஜனவரி 04, ஐதராபாத் (Telangana News): கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள பாவி தொட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி நரேஷ்-மாரியம்மா. இதில், மாரியம்மா கர்ப்பமாக இருந்ததால், அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக ராய்ச்சூரில் இருந்து கட்வால் செல்லும் தெலுங்கானா ஆர்டிசி பேருந்தில் (RTC Bus) ஏறினார். ஆர்டிசி பேருந்தில் பயணம் செய்தபோது மாரியம்மாவுக்கு முதுகு வலி ஏற்பட்டது. Girlfriend Stabbed Boyfriend: திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு கத்திக்குத்து.. இளம்பெண் அதிர்ச்சி செயல்..!
வலியால் அவதியுற்ற கர்ப்பிணி பெண்:
இதைப்பார்த்த சக பயணிகள் ஓட்டுநரிடம் கூறி பேருந்தை சாலையோரம் நிறுத்தினர். வலி அதிகமாக இருந்ததால், பேருந்தில் இருந்த பெண் பயணிகள் அனைவரும் அவருக்கு பிரசவம் (Childbirth) பார்த்தனர். பின்னர், அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அவசர ஊர்தியில் கட்வாலா அரசு மருத்துவமனைக்கு சக பயணிகள் கொண்டு சென்றனர். தற்போது, தாயும் சேயும் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ இதோ:
👉ఆర్టీసీ బస్సులో మహిళా ప్రసవం.
👉జోగులాంబ గద్వాల జిల్లాకు చెందిన మరియమ్మను ఆర్టీసీ బస్సులో అత్తవారి ఇంటి నుండి కాన్పు కోసం కర్ణాటకలోని ధరూరు ప్రభుత్వ ఆసుపత్రికి వెళ్లే క్రమంలో బస్సులోనే ప్రసవించింది.
👉తల్లి బిడ్డ ఇద్దరు క్షేమంగా ఉన్నారు. pic.twitter.com/G0IqM7xr7s
— ChotaNews App (@ChotaNewsApp) January 3, 2025