ஜனவரி 03, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், ஹாசன் (Hassan) மாவட்டத்தை சேர்ந்தவர் மனுகுமார் (வயது 25). இவர், அதே பகுதியைச் சேர்ந்த பவானி (வயது 25) என்ற இளம்பெண்ணை கடந்த பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். மனுகுமார், உணவகம் ஒன்று வைத்து நடத்தி வந்தார். கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே, இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். Jana Sena Party: புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச ஆட்டம்.. பவன் கல்யாண் கட்சியினர் அதிர்ச்சி செயல்..!
கடும் வாக்குவாதம்:
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மனுகுமார் தனது காதலி பவானியுடன் சரியாக பேசாமல் அவரை தவிர்த்து வந்துள்ளார். மேலும், திருமணக் குறித்துப் பேசினாலே, எதாவது காரணம் சொல்லித் தட்டிக் கழித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில், புத்தாண்டை கொண்டாட மனுகுமாரின் நண்பர்கள் அவரை அழைத்துள்ளார். அந்த நேரத்தில் சம்பவ இடத்திற்கு பவானியும் வந்துள்ளார். பின்னர், இருவரும் ஒரு தனி அறையில் அமர்ந்து திருமணம் குறித்து பேசியுள்ளனர். ஆனால், அப்போதும் அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் மறுப்பு தெரிவித்துள்ளார்.
காதலனுக்கு கத்திக் குத்து:
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பவானி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது காதலனை சரமாரியாக (Knife Stab) குத்தியுள்ளார். மனுகுமாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பவானியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.