Pilot Dies By Suicide: வீடியோ காலில் பேசியபடி பெண் விமானி தற்கொலை.. காதலன் கைது..!

மகாராஷ்டிராவில் அசைவ உணவு சாப்பிட வேண்டாம் என்று காதலன் கூறியதால் வீடியோ காலில் பேசிக் கொண்டே பெண் விமானி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pilot Dies By Suicide: வீடியோ காலில் பேசியபடி பெண் விமானி தற்கொலை.. காதலன் கைது..!
Female Pilot Dies By Suicide (Photo Credit: @ndtv X)

நவம்பர் 29, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், மும்பை (Mumbai) அந்தேரியில் உள்ள வாடகை வீட்டில் ஏர் இந்தியா பெண் விமானி (Female Pilot) சிருஷ்டி துலி (வயது 25) வசித்து வந்தார். இவரும் ஆதித்யா ராகேஷ் பண்டிட் (வயது 27) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. திடீரென காதலன் ஆதித்யா ராகேஷ் பண்டிட் டெல்லி செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டார். ஆனால், டெல்லி செல்வதை சிருஷ்டி துலி தடுத்தார். Nurse Gang Rape: பெண் செவிலியர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. பெண்ணுறுப்பில் மிளகாய் பொடி வைத்து சித்ரவதை..!

அதனால் இருவருக்கும் இடையே மேலும் சண்டை ஏற்பட்டது. அங்கிருந்து காரில் கிளம்பிய ஆதித்யாவை தொடர்பு கொண்ட சிருஷ்டி, தான் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி வீடியோ காலில் பேசியுள்ளார். ஆனால், காதலியின் மிரட்டலை பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், வீடியோ காலில் பேசிக் கொண்டே, சிருஷ்டி துலி வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதித்யா, மீண்டும் அந்தேரிக்கு வந்தார். வீட்டின் கதவை திறக்க முயன்றபோது உள்தாழிட்டு இருந்தது. உடனே, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து, தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சிருஷ்டி துலியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதன் முதற்கட்ட விசாரணையில், அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்துமாறு சிருஷ்டியை ஆதித்யா கேட்டுக் கொண்டார். மேலும், தனது உணவு பழக்கத்திற்கு மாறும்படி சிருஷ்டியை ஆதித்யா கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதனால், இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. அதன்பின், ஆதித்யா டெல்லி செல்வதாக கிளம்பினார். தொடர்ந்து வீடியோ காலில் பேசிக் கொண்டே சிருஷ்டி துலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, ஆதித்யாவை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 29, 2024 04:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).