Road Accident: கார் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 4 மருத்துவர்கள் உட்பட 5 பேர் பரிதாப பலி..!

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் 4 மருத்துவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: கார் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 4 மருத்துவர்கள் உட்பட 5 பேர் பரிதாப பலி..!
Five Doctors Death in Road Accident (Photo Credit: @Indian__doctor X)

நவம்பர் 27, கான்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் மருத்துவர்கள் சக ஊழியரின் திருமண விழாவில் கலந்துகொண்டு சொகுசு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, இன்று (நவம்பர் 27) காலை லக்னோவில் இருந்து எட்டாவா மாவட்டம் சாய்பாய் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார், கன்னோஜ் (Kannauj) அருகே சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி மறுபக்கம் பாய்ந்துள்ளது. பின்னர், எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி (Car - Lorry Accident) விபத்துக்குள்ளானது. School Boy Dies: பூரி தொண்டையில் சிக்கி மாணவர் பலி.. பெற்றோர் பரிதவிப்பு..!

இந்த கோர விபத்தில் கார் மோசமாக சேதமடைந்தது. மேலும், காரில் இருந்த 4 மருத்துவர்கள், ஒரு லேப் டெக்னீசியன் என 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த மருத்துவர்கள் அனிருத் வர்மா, சந்தோஷ் குமார் மவுரியா, ஜெய்வீர் சிங், அருண் குமார் மற்றும் நர்தேவ் என அடையாளம் காணப்பட்டனர். இதில், முதுகலை மருத்துவ மாணவர் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கன்னாஜ் மாவட்டம் திருவா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவர்கள் அனைவரும் சாய்பாய் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றியவர்கள் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 27, 2024 02:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).