Road Accident: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் பரிதாப பலி..!

உத்தரகாண்ட்டில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் பரிதாப பலி..!
Car Accident In Uttarakhand (Photo Credit: @PTI_News X)

நவம்பர் 15, டேராடூன் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலம், ரூர்க்கியில் (Roorkee) கார் விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மீரட்டில் (Meerut) இருந்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற கார் இன்று (நவம்பர் 15) அதிகாலை விபத்துக்குள்ளானது. அந்த காரில் 8 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை (Car Accident) இழந்து கவிழ்ந்ததில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். Minor Girl Gang Rape: 15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. சிறுவன் உட்பட இருவர் கைது..!

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்து: 

(The above story first appeared on LatestLY on Nov 15, 2024 01:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).